Pheonix
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Pheonix


 
HomeLatest imagesSearchRegisterLog in

 

 ~~ GANDHI JI QUOTES ~~

Go down 
AuthorMessage
°l||l° KARTHIK °l||l°

°l||l° KARTHIK °l||l°


Posts : 340
Points : 971
Reputation : 9
Join date : 2010-11-24
Age : 32

~~ GANDHI JI QUOTES ~~ Empty
PostSubject: ~~ GANDHI JI QUOTES ~~   ~~ GANDHI JI QUOTES ~~ EmptyThu Dec 09, 2010 2:49 pm

* எத்தனை குழப்பங்கள் நேர்ந்தாலும் எப்போதும் உண்மையை மறைக்காமல் கூறுகின்ற மனவுறுதி வேண்டும்.

* பொய் நிலைத்திருக்க முடியாது. உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

* பகைவனை மன்னிக்க தெரியாதவன் உலகில் அடையக்கூடிய உயர்ந்த இன்பத்தை இன்னும் அறியாதவன் என்று தான் சொல்லவேண்டும்.

* உனக்கு நீயே நீதிபதியாக இருக்கக் கற்றுக்கொள். தனக்கு தானே நல்லவனாக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது.

* மனிதன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த மனிதனே பூரண சுதந்திரம் பெற்றவனாக இருப்பான்.

* செயலில் கெட்டவர்களைக் கூட கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், மனதால் கெட்டவர்கள் தான் மிகவும் கொடியவர்கள் என்று சொல்ல வேண்டும்.

* ஆண்மை என்பது மற்றவர்களிடம் வீரத்துடன் நடப்பது என்று நினைக்கிறார்கள். சந்தர்ப்பங்களுக்கு அடிமையாகாமல், சந்தர்ப்பத்தை தனக்கு அடிமையாக்கிக் கொள்பவனே ஆண்மை உடைய வெற்றி வீரன்.

* கோயில் மட்டுமே பக்திக்கும் வழிபாட்டிற்கும் உரியது அல்ல. நாம் பணிபுரியும் இடமும் கோயிலைப் போன்றதே.

* கடவுளிடம் பேரம் பேசாதீர்கள். சரணாகதி அடைவதே மேன்மையான வழி. கடவுளிடம் முழுமையான நம்பிக்கை கொண்டவர்களுக்கு யார் மீது கோபமோ, வெறுப்போ தோன்றாது. பகையுணர்வு அற்றுப்போகும். அவர்கள் தீமையை மட்டும் வெறுப்பார்களே தவிர, தீயவர்களை ஒருபோதும் வெறுக்க மாட்டார்கள்.

*பொதுவாக கண்பார்வை அற்றவர்களை குருடர்கள் என்று எண்ணுகிறோம். எவனொருவன் தன்னிடமுள்ள குற்றம் குறைகளை மற்றவர்கள் அறிந்து முடியாதபடி மறைப்பதில் இன்பம் காணுகின்றானோ அவனே கண் பார்வை அற்றவன் ஆவான்.

* பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய உண்மையான சொத்து, பிள்ளைகளை ஒழுக்கம் உள்ளவர்களாக வளர்ப்பதும், வேண்டிய கல்வியைத் தருவதும் தான். இவ்விரண்டு செல்வங்கள் இருந்தால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
Back to top Go down
http://chit.omgforum.net
 
~~ GANDHI JI QUOTES ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Miss you quotes..
» Anniversary Quotes
» Anniversary Quotes
» ~~ Quotes - Jawaharlal Neheru ~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Pheonix :: Entertainment :: Quotes-
Jump to: